இந்திய சினிமாவில் தனக்கென்று ஒரு நிலையான இடத்தை பிடித்தவர் தனுஷ். ஆரம்பத்தில் பல அவமானங்களை கண்டாலும் அதையெல்லாம் தூக்கி எறிந்து இன்று தவிர்க்க முடியாத நடிகராகிவிட்டார்.
இவரை செல்வராகவன் என்ன தான் செதுக்கியிருந்தாலும், வெற்றிமாறன் அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து சென்றார், இவர்கள் இருவருமே தனுஷின் இரு கண்கள் என்று கூறலாம்.
சரி தனுஷ் பாக்ஸ் ஆபிஸில் எப்படி என்பதை இந்த லிஸ்ட் வைத்து பார்க்கலாம்…
ராஞ்சனா
தனுஷ் நடித்த முதல் ஹிந்தி படம், முதல் படமே ரூ 100 கோடி வசூல் செய்து தனுஷ் பாலிவுட்டிலேயே பல விருதுகளை வென்றார்.
அசுரன்
அசுரன் தனுஷின் அடுத்தக்கட்டம் என்றே சொல்லலாம், உலகம் முழுவதும் ரூ 75 கோடி வரை இப்படம் வசூல் செய்தது.
வேலையில்லா பட்டதாரி
தனுஷை ஒரு கமர்ஷியல் ஹீரோவாக தென்னிந்திய முழுதும் கொண்டு சென்றது இந்த படம் தான், இப்படம் ரூ 55 கோடி வரை வசூல் செய்தது.
கொடி
தனுஷ் முதன் முறையாக டபுள் ஆக்ஷனில் நடித்த இந்த படம் ரூ 52 கோடி வரை வசூல் செய்தது.
அனேகன்
அனேகன் என்ன தான் விமர்சனம் இருந்தாலும் செம்ம ஜாலியாக கூல் பாயாக தனுஷ் ரூ 48 கோடி வரை வசூல் செய்து பந்தயம் அடித்தார்.
மாரி
மாரி பல மோசமான விமர்சனம் பெற்றாலும் தனுஷிற்கு குழந்தைகள் மத்தியில் நல்ல ரீச் கிடைத்த படம், இப்படம் ரூ 47 கோடி வரை வசூல் செய்தது.
பட்டாஸ்
பட்டாஸ் இந்த பொங்கல் விருந்தாக திரைக்கு வந்து சுமார் ரூ 45 கோடி வரை வசூல் செய்தது.
வடசென்னை
தனுஷ் வெற்றிமாறனின் கல்ட் படமாக அமைந்த வடசென்னை சுமார் ரூ 40 கோடி வரை வசூல் செய்தது.
மாரி 2
மாரி 2 படமும் பல விமர்சனம் இருந்தாலும் ரூ 30 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது.
ஷமிதாப்
தனுஷின் மற்றொரு பாலிவுட் படமான ஷமிதாப் ரூ 30 கோடியை தாண்டியது.
தன் திரைப்பயணத்தின் உச்சத்தில் இருக்கும் தனுஷ் இன்னு பல உச்சத்தை தொட இந்த பிறந்தநாளில் சினி உலகம் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது.