உலகில் பெரும்பாலான மக்கள் இரத்த அழுத்தப்பிரச்சனைக்கு ஆளாகிறார்கள். ஒவ்வொரு வருடமும் இந்நோயால் பாதிக்கப்படுபவரின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துவருகிறது.
இது இரண்டு வகைப்படும் ஒன்று உயர் அழுத்தம் மற்றது குறைந்த அழுத்தம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
உயர் இரத்த அழுத்தம் ஒரு பொதுவான உடல்நலப் பிரச்சினையாகும். இதேபோல் தான் குறைந்த இரத்த அழுத்தமும் ஒரு பொதுவான பிரச்சினையாகும்.
இரத்த சோகை, நீரிழப்பு, குறைந்த கலோரிகளின் நுகர்வு, குறைந்த இரத்த சர்க்கரை அளவு, சில மருந்துகள், மன அழுத்தம் என குறைந்த இரத்த அழுத்தத்திற்கு பின்னால் பல்வேறு காரணங்கள் இருக்கலாம்.
குறைந்த இரத்த அழுத்தம் மங்கலான பார்வை, தலைச்சுற்றல், குமட்டல், வாந்தி, மயக்கம், செறிமான சிக்கல், பலவீனம் போன்றவை இதன் அறிகுறிகள் ஆகும்.
குறைந்த ரத்த அழுத்தம் உடலுக்கு ஆபத்தைதான் தரும். ஆகவே உடனடியாக கவனிக்க வேண்டும்.
இதற்கு சில உணவு பொருட்கள் உதவி புரிகின்றது. அந்த உணவுகளை தேர்ந்தெடுத்து உண்ணுவதனால் இரத்த அழுத்தத்தை ஆரோக்கிய முறையில் அதிகரிக்கலாம்.
அந்தவகையில குறைந்த இரத்த அழுத்தத்தை எதிர்த்துப் போராட உங்கள் உணவில் சேர்க்கக்கூடிய சில உணவுகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
- இளநீர், மோர், பழச்சாறுகள் மற்றும் பலவற்றையும் சேர்த்து நீங்கள் நாள் முழுவதும் ஏராளமான தண்ணீரைக் குடிக்க வேண்டும்.
- குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்கள் தங்கள் இரத்த அழுத்த எண்ணிக்கையை உயர்த்த அதிக உப்பு சேர்க்கலாம். அதிக உப்பு உள்ள ஆலிவ், பாலாடைக்கட்டி, கேனில் அடைக்கப்பட்ட பொருட்களை நீங்கள் முயற்சி செய்யலாம்.
- அதிக வைட்டமின் பி 12-ஐ சேர்ப்பது பல உடல்நலப் பிரச்சினைகள் மற்றும் குறைந்த இரத்த அழுத்தத்தை எதிர்த்துப் போராட உதவும்.
- இரத்த அழுத்த எண்களை உயர்த்த நீங்கள் ஒரு கப் காபி குடிக்கலாம். ஆனால் அதிகப்படியான காஃபின் உங்களுக்கு தீங்கு விளைவிக்கலாம். காஃபின் அதிகமாக உட்கொள்வதைத் தவிர்க்கவும்.
- மிகக் குறைந்த கலோரிகளை உட்கொள்வதும் குறைந்த இரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும். அதற்கு சிறிய ஆரோக்கியமான உணவை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும், இது உடல் எடையை எதிர்த்துப் போராட உதவும்.



















