கொரோனா ஊரடங்கால், ஆன்லைன் மூலமாக ஏராளமான சூதாட்டங்கள் அறிமுகமாகி விளையாடப்பட்டு வருகிறது. அதிலும், அனைவரும் வீட்டில் முடங்கி இருக்கும் நிலையில் இத்தகைய ஆன்லைன் சூதாட்டங்களுக்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள், பெண்கள் என அனைவரும் அடிமையாகி உள்ளனர்.
இதனால் பலரும் பெருமளவில் பொருளாதாரத்தை இழந்துள்ளனர். மேலும் சமீபத்திலும் ஆன்லைன் சூதாட்டத்தினால் பணத்தை இழந்த 20 வயது கல்லூரி மாணவர் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்நிலையில், தமிழகத்தில் மொபைல் பிரீமியர் லீக் சூதாட்டங்கள், ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய வேண்டும் எனவும்.
அதற்கான விளம்பரங்களில் நடித்து வரும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் நடிகை தமன்னா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி அய்யா வைகுண்டர் மக்கள் கட்சி சார்பில் டிஜிபியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.




















