வளரும் சைக்கிள் பந்தய வீரரான ரியாசுக்கு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சைக்கிள் ஒன்றை பரிசாக அளித்துள்ளார்.
டெல்லியில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவரான ரியாஸ், ஏழ்மையான குடும்ப பின்னணியைக் கொண்டவர். தனது தந்தைக்கு உதவும் நோக்கில், உணவகம் ஒன்றில் இவர் பாத்திரம் தேய்த்து வந்துள்ளார். 2017ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற மாநில அளவிலான சைக்கிள் பந்தய போட்டியில் வெண்கள பதக்கம் வென்றதை அடுத்து பலரின் கவனத்தை இவர் ஈர்த்தார்.
சர்வேதச சைக்கிள் பந்தய வீரராக வேண்டும் என்ற ஆர்வம் கொண்ட ரியாஸ் சைக்கிள் வாங்க வசதி இல்லாததால் சைக்கிள் கடன் வாங்கி பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதனை அறிந்த குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் , நாளை பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மாணவர் ரியாசுக்கு புதிய சைக்கிள் ஒன்றை அன்பளிப்பாக வழங்கினார்.
Motivating youth for nation-building!
President Kovind gifted a racing bicycle to a school boy Riyaz who dreams of excelling as a top cyclist. The President wished him to become an international cycling champion and realise his dream through hard work. https://t.co/LcwrPknMdf pic.twitter.com/J1pL5dsZ8P
— President of India (@rashtrapatibhvn) July 31, 2020