அம்பாறை, சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் ஒன்றில் நேற்றையதினம் தேர்தல் பிரச்சார நடவடிக்கையின் போது துப்பாக்கியை எடுத்து வந்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
37 வயதான இறக்காமம் பகுதியைச் சேர்ந்த ஒருவரே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதியில் நேற்றையதினம், தேசிய காங்கிரஸ் அணியினரின் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த வேளையில் பாய் ஒன்றின் கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் றிப்பிட்டர் ரக துப்பாக்கி ஒன்று ஆறு தோட்டாக்களுடன் மீட்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், கூட்டத்திற்கு பாதுகாப்பு வழங்குவதன் நிமித்தம் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை மீட்டதுடன், தேசிய காங்கிரஸ் அணியினரின் வாகனத்தில் அந்த துப்பாக்கியை மறைத்து வைத்ததாக தெரிவித்து சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
இதேவேளை, கைது செய்யப்பட்ட சந்தேகநபரை 3 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்ள சம்மாந்துறை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.