உலக நாடுகளை ஆட்டம் காண வைத்துள்ள கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கான சோதனைகள் நிறைவடைந்துவிட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் பல நாடுகளின் ஆராய்ச்சியாளர்கள், மருத்துவ நிறுவனங்கள் தொடர் பரிசோதனையில் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில் ரஷ்யாவின் கமலேயா நிறுவனம் தடுப்பூசிக்கான சோதனைகள் நிறைவடைந்ததாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் கூறுகையில், தடுப்பூசியை மனிதர்களுக்கு சோதனை செய்யும் முயற்சிகள் நிறைவடைந்துவிட்டது, அடுத்ததாக இதற்கான ஆவண வேலைகள் நடந்து வருகிறது என தெரிவித்துள்ளார்.
மேலும் வருகிற அக்டோபர் மாதம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரலாம் எனவும் தெரிவித்துள்ளார்.