அமெரிக்கா ஜனாதிபதி தேர்தலில் தமிழ் உட்பட 14 இந்திய மொழிகளில் பிரச்சாரம் நடந்துள்ளது.
அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் வருகிற நவம்பர் 3ம் திகதி நடைபெறுகிறது, இத்தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் டொனால்டு டிரம்பும், ஜனநாயக் கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதியான ஜோ பிடனும் போட்டியிடுகின்றனர்.
இரு கட்சியினரும் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வரும் சூழலில், இந்தியர்களின் ஆதரவை பெற உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக ஜோ பிடனின் ஆதரவாளர்கள் 14 இந்திய மொழிகளில் கொள்கைகளை வெளியிட்டுள்ளனர்.
அதாவது, தமிழ், தெலுங்கு, வங்கமொழி, ஹிந்தி, பஞ்சாபி, உருது, கன்னடம், மலையாளம், ஒடியா, மராத்தி, நேபாளி உள்ளிட்ட மொழிகளில் ஜோ பிடனின் செயல்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக ஜோ பிடனின் பிரசாரத் திட்டங்களை நிா்வகித்து வரும் அஜய் பூடோரியா கூறுகையில், இந்தியா்களை அவா்களின் சொந்த மொழிகளில் சென்றடையும் நோக்கில் செயல்திட்டத்தை 14 மொழிகளில் வெளியிட்டுள்ளோம், இது இந்தியர்களின் ஆதரவை பெற உதவும் என தெரிவித்துள்ளார்.