தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட போரை பிரச்சாரமாக்கி அதனை வாக்குகளாக மாற்றுவதில் சிறீலங்காவின் தென்னிலங்கை கட்சிகளிடையே கடுமையான போட்டி நிலவி வருகின்றது.
இந்த நிலையில் 2006 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளின் தற்கொலைத் தாக்குதலில் படுகாயங்களுடன் உயிர்தப்பிய சிறீலங்காவின் முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா அந்த தாக்குதலில் சேதமடைந்த தனது பேர்ஜோ – 406 காரை ஊர்வலமாக எடுத்துச் சென்று பிரச்சாரத்தை மேற்கொண்டுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
பெண் தற்கொலைதாரியை போன்ற உருவப்பொம்மையும் இந்த பிரச்சாரத்தில் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.