கடலூர் மாவட்டத்தில் கோவில் ஒன்றினுள் பெண்ணின் சடலம் ஒன்று அரை நிர்வாணமாக இருந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் திட்டக்குடி அடுத்துள்ள பகுதியில் மிகவும் பிரபலமான மேலகல்பூண்டி அய்யனார் கோவில் உள்ளது.
இந்த கோயிலுக்குள் ஒரு பெண்ணின் சடலம் கிடப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து விரைந்து வந்த பொலிசார் பெண்ணின் சடலத்தினைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளதோடு விசாரணையும் நடத்தியுள்ளனர்.
உயிரிழந்தவர் வடகாரப்பூண்டி கிராமத்தை சேர்ந்த அழகுவேல் என்பவர் மனைவி கருப்பாயி(45) என்பது மட்டும் முதல்கட்டமாக தெரியவந்துள்ளது. ஆனால் இவரது மரணம் கொலையா? அல்லது வன்கொடுமை செய்து கொல்லப்பட்டாரா என்று தெரியாத நிலையில், பொலிசார் பல கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.