மீகஹகிவுல பகுதியில் கித்துல் கள் விசமாகியதால் பாடசாலை மாணவர் ஒருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கம்பத பிரதேச பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர் ஒருவரே இவ்வாறு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நண்பர் ஒருவர் வழங்கிய கள்ளை அருந்திய சிறிது நேரத்தில் இரத்த வாந்தி ஏற்பட்டுள்ள நிலையிலேயே
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.