முன்னாள் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் வாஸ் குணவர்தனவுக்கு எதிராக 2014ஆம் ஆண்டு நடைபெற்ற வழக்கில் பொய் சாட்சி வழங்கியமை தொடர்பில் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
எம்லிப்பிட்டிய பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் பரிசோதகரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் வாஸ் குணவர்தனவுக்கு எதிரான வழக்கில் பொய் சாட்சி கூறியதாகவே உப பொலிஸ் பரிசோதகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே கைது செய்யப்பட்ட குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



















