பெய்ரூட் துறைமுகத்தில் ஏற்பட்ட வெடிவிபத்திற்கு பிறகு நகரம் ஒளிரும் சிவப்பு நிறத்தில் பிரகாசிப்பதை பார்க்க முடிந்ததாக கூறியுள்ளார்.
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இருக்கும் துறைமுகம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்து காரணமாக இதுவரை 135 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இடிபாடுகளுக்கிடையே இருப்பவர்களை மீட்கும் பணியில் மீட்பு பணியில் செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்த விபத்து குறித்து அங்கு வசித்து பிரித்தானியாவை சேர்ந்த பெண் ஒருவர் இது ஒளிரும் சிவப்பு மேகம் மற்றும் பயங்கரமான புகைப்போக்கி போன்று இருந்ததாக விவரித்துள்ளார்.
பிரித்தானியாவின் Dorset பகுதியை சேர்ந்த Claire Malleson. இவர் பெய்ரூட்டின் American University-யில் இரண்டு ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.
அவர் பிரபல செய்தி நிறுவனம் ஒன்றிற்கு கூறுகையில், மிகப் பெரிய வெடிப்பை நான் உணர்ந்தேன். இது எங்கள் வளாகத்தில் எங்காவது நடந்திருக்குமோ என்று நினைத்தேன். ஏனெனில் இவர் அன்றைய தினம் அந்த பலகழைக்கழகத்தில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார்.
இந்த சம்பவம் மூன்று மைல் துரத்தை விட மிகவும் நெருக்கமாக இருப்பதை போன்று உணர்ந்தேன்.
எனக்கு அருகிலுள்ள கட்டிடங்களுக்கு சேதம் ஏற்பட்டது மட்டுமின்றி ஒரு ஒளிரும் சிவப்பு மேகம் மற்றும் ஒரு புகைபோக்கி ஆகியவற்றை என்னால் காண முடிந்தது.
என்னால் உண்மையில் நகர முடியவில்லை, நான் அந்த இடத்திலே இருந்தேன்.
எனது முதல் எண்ணம் ஒரு தொலைபேசியில் சென்று எனது பெற்றோரை ஒரு செய்திமடலைக் கண்டால் அழைக்க வேண்டும். வளாக அடுக்குமாடி குடியிருப்பில் ஒன்றிற்கு நான் திரும்பிச் சென்றேன்.
எல்லோரும் ஒரு திகைப்புடன் நடந்து கொண்டிருந்தார்கள். நான் வளாக வீட்டுக் கட்டடங்களுக்கு அருகில் வந்தவுடன், பீதி இருப்பதைக் காண முடிந்தது.
எல்லோரும் பூகம்பம் போன்று உணர்ந்ததாகக் கூறியுள்ளார். இந்த விபத்தால் பிரித்தானியர்கள் எத்தனை பேர் காயமடைந்துள்ளனர் என்பது குறித்து இன்னும் எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.




















