பல முறை முயற்சி செய்தும் உங்கள் தொப்பை மட்டும் குறைய வில்லையா? இரவில் படுக்கும் முன் இஞ்சி, கொத்தமல்லி, எலுமிச்சை மற்றும் பல பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட அற்புத பானத்தை குடித்தால் நல்ல மாற்றத்தினை உணரலாம்.
ஏனெனில் இந்த ஜூஸில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்களில் உள்ள சக்தி வாய்ந்த மருத்து குணங்களால், உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்கள் விரைவில் கரையுமாம்.
இப்போது தொப்பையைக் குறைக்க உதவும் அந்த பானத்தை தயாரிக்கும் முறை குறித்து காணலாம்.
பானம் தயாரிக்கும் முறை
- வெள்ளரிக்காய் – 1
- கொத்தமல்லி – 1 கட்டு
- எலுமிச்சை – 1
- துருவிய இஞ்சி – 1 டேபிள் ஸ்பூன்
- கற்றாழை ஜூஸ் – 1 டேபிள் ஸ்பூன்
- தண்ணீர் – 1/2 டம்ளர்
மேற்கூறிய பொருட்களை சாறு எடுத்து கலந்து வைத்து கொள்ளுங்கள்.
தினமும் இரவில் படுக்கும் முன் குடித்து வந்தால், தொப்பை குறைவதை நன்கு காணலாம்.




















