பிரித்தானியாவில் காதலர் ஒருவர் வித்தியாசமாக காதலைச் சொல்வதற்காக வீட்டில் நூறு மெழுகுவர்த்திகளை ஏற்றிவைத்துவிட்டு காதலியை அழைத்துவரச் சென்ற நிலையில், வீடே எரிந்துபோனது.
தெற்கு யார்க்ஷையரைச் சேர்ந்த Albert Ndreu (26), தனது காதலியிடம் அவர் தன்னை மணந்துகொள்வாரா என்பதை வித்தியாசமாக கேட்க எண்ணியிருக்கிறார்.
அதற்காக, நீண்ட நாட்கள் திட்டமிட்ட Albert, ஒரு நாள் 100 மெழுகுவர்த்திகளை வாங்கி, அவற்றைக் கொண்டு ‘Marry Me?’ என்று அழகாக அடுக்கியதுடன், வீடு முழுவதும் அலங்கரித்திருகிறார்.
அத்துடன் 60 பலூன்களையும் வாங்கி நான்கு மணி நேரமாக, பலூன்களை ஊதி, வீட்டை அலங்கரித்து, மெழுகுவர்த்திகளை கொளுத்தி, வாப்டாப்பில் ரொமாண்டிக் இசையை ஒலிக்க வீடு, ஒரு போத்தல் ஒயினையும் வாங்கிவைத்துவிட்டு, வேலைக்கு சென்ற காதலியை அழைத்துவரச் சென்றிருக்கிறார்.
ஆனால் அவரும் அவரது காதலியான Valerija Madevicம் வீடு திரும்பும்போது, அவர்களது வீடு தீப்பிடித்து எரியும் காட்சியைத்தான் கண்டிருக்கிறார்கள்.
வீடு தீப்பிடித்து, போட்ட திட்டமெல்லாம் நாசமானாலும், தன் காதலைச் சொல்ல தயங்காத Albert, எரிந்த அந்த வீட்டிற்குள்ளேயே முழங்காலிட்டு, என்னை மணந்துகொள்வாயா என Valerijaவிடம் கேட்டுள்ளார்.
காதலைச் சொல்வதற்கே இந்த ஆள் இப்படி மெனக்கெடுவாரென்றால், கண்டிப்பாக திருமணத்துக்குப் பின் நம்மை நன்றாக வைத்துக்கொள்வார் என்று எண்ணினாரோ என்னவோ, Valerijaவும் உடனே Albertஇன் காதலை ஏற்றுக்கொண்டுள்ளார்.
தற்போது உறவினர் ஒருவர் வீட்டில் தங்கியிருக்கும் ஜோடி அடுத்த கட்ட திட்டங்களை போட்டுக்கொண்டிருக்கிறது.