ஸ்ரீலங்காவின் ஒன்பதாவது நாடாளுமன்றத் தேர்தலுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டு, விருப்பு வாக்குகள் விபரங்களும் தற்போது முழுமையாக வெளியாகியுள்ளன.
இந்நிலையில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்ட பொது ஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ 5,27,364 விருப்பு வாக்குகளைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.
கடந்த 2015 தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 5,00,566 வாக்குகளைப் பெற்றிருந்தார். அந்த சாதனையை இப்போது மஹிந்த முறியடித்துள்ளார்.
ஒன்பதாவது நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 145 ஆசனங்களை கைப்பற்றி அறுதிப் பெரும்பான்மை பலத்தை பெற்று இருக்கிறது.
எனினும் பாரம்பரிய கட்சியான ஐதேக இம்முறை படுதோல்வியை சந்தித்திருக்கிறது. இதற்கிடையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஆரம்பிக்கப்பட்டு குறுகிய காலத்திற்குள் மகத்தான வெற்றியை பதிவு செய்திருக்கிறது.
இந்த நிலையில், அக்கட்சியின் ஆதரவாளர்கள் மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.