நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் ஜீவன் தொண்டமான் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்ட ஜீவன் தொண்டமான் 109,155 விருப்பு வாக்குகளைப் பெற்று அமோக வெற்றியைப் பதிவுசெய்துள்ளார்.
அத்துடன், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் கைப்பற்றப்பட்ட 5 ஆசனங்களில் ஜீவன் தொண்டமானை அடுத்து சி.பி.ரத்னாயக்க 70,781 வாக்குகளைப் பெற்றுள்ளார். அத்துடன், எஸ்.பி.திஸ்ஸாநாயக்க 66,045 வாக்குகளையும், எம்.ரமேஸ்வரன் 57,902 வாக்குகளையும், நிமல் பியதிஸ்ஸ 51,225 வாக்குகளையும் பெற்று வெற்றிபெற்றுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் மூன்று ஆசனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதோடு, அதில் பழனி திகாம்பரம் 83,392 விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார். அத்துடன், பி.இராதாகிருஸ்ணன் 72,167 வாக்குகளையும் எம்.உதயகுமார் 68,119 வாக்குகளையும் பெற்று வெற்றிபெற்றுள்ளனர்.