தேர்தல் கடமையில் இருந்த ஒரு அதிகாரி திடீரென அருகில் இருந்த கை சுத்திகரிப்பு மருந்தை (sanitiser)ஐ உட்கொண்டுள்ளார்.
இதனால் பாதிக்கப்பட்ட அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
களுத்துறை – பஸ்துன்ரட்ட என்ற இடத்தில் வாக்குகள் எண்ணும் மையத்தில் கடமையில் இருந்த தேர்தல் ஆணைய அதிகாரியே இதில் பாதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (06) இடம்பெற்ற நிலையில் அவர் நாகொட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மேலும் அந்த அதிகாரி தற்செயலாகவே இதை குடித்ததாகவும், சிகிச்சையின் பின்னர் வீட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார் என ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.