மிகவும் குறுகிய காலத்திற்குள் ஐக்கிய மக்கள் சக்தி பெற்றுக் கொண்ட வாக்கு வீதம் மெச்சத்தக்கது என அந்த கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்துடன் எந்தவித டீல் அரசியலிலும் ஈடுபடாமல், சவால்மிக்க ஒரு எதிர்க்கட்சியாக விளக்குவோம் எனவும் அவர் தெரிவித்தார்.
உண்மையான மக்கள் சேவையை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.
சம்பிரதாய பூர்வமாக தனியொருவர் கட்சியை வழி நடத்துவதன் பிரதிபலனை ஐக்கிய தேசியக் கட்சி இன்று அனுபவிப்பதாகவும் அவர் கூறினார்.
ஐ.தே.கவிற்குள் கூட்டுதாபன நிர்வாகமே உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.