முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு தனது ஆதரவை வெளியிட்டுள்ளார்.
பொலன்னறுவையில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இதனை கூறியுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் புதிய அரசாங்கத்தின் கீழ் நாட்டை அபிவிருத்திசெய்வதற்கும் வளமான பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதற்கும் தன்னை அர்ப்பணிப்பு செய்யப்போவதாக அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், புதிய அரசாங்கத்தின் ஒரு பகுதியாக நாகரீக சமூகத்தை ஏற்படுத்த முயலப்போவதாகவும் வலியுறுத்தியுள்ள அவர், தேர்தல் வெற்றிக்கு தனது நன்றிகளையும் கூறியுள்ளார்.
இதனிடையே, தேர்தல் ஆணையத்தின் அனைத்து அதிகாரிகள், சுகாதார அதிகாரிகள், காவல்துறை மற்றும் நாட்டில் அமைதியான தேர்தலை உறுதி செய்வதில் தங்களை ஈடுபடுத்திக் கொண்ட அதிகாரிகள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்தார்.



















