ஐ.தே.க தலைமையில் மாற்றத்தை ஏற்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
நேற்று கட்சியின் உயர்மட்ட கலந்துரையாடலில் இதற்கான கவனம் செலுத்தப்பட்டது.
நேற்றைய கலந்துரையாடலில் தலைமை பதவிக்கான பல பெயர்கள் முன்மொழியப்பட்டன.
இதில் முன்னாள் எம்.பி, ருவான் விஜேவர்த்தனவின் பெயரும் உள்ளடங்குகிறது. அவரை குறிப்பிட்டளவானவர்கள் ஆதரித்துள்ளனர். இது தொடர்பான கலந்துரையாடல்களின் பின்னர், அடுத்த வாரமளவில் இறுதி முடிவு அறிவிக்கப்படவுள்ளது.
நேற்றைய கலந்துரையாடலின் போது, கட்சியின் தலைவராக தொடர தான் விரும்பவில்லையென்பதை ரணில் வெளிப்படுத்தியுள்ளார். தகுதியான ஒருவரை அடையாளம் கண்டு பிரேரிக்கும்படியும், அவரிடம் பொறுப்பை ஒப்படைக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்


















