ஸ்ரீறிலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு, வெற்றி பெற்றுள்ள அங்கஜன் இராமநாதனின் வரவேற்பு நிகழ்வு இன்று யாழில் நடைபெற்றுள்ளது.
யாழிலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் யாழ் மாவட்ட இளைஞரணியின் ஏற்பாட்டில் இன்று இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இதன் போது வெடி கொழுத்தி, மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டு, பொன்னாடைகள் போர்த்தி அங்கஜனுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.




















