நாக்கில் கொப்புளங்கள் ஏற்படுவது எல்லாம் ஒரு பொதுவான பிரச்சனை தான்.
நாக்கில் கொப்புளங்கள் பொதுவாக திடீரென உங்கள் பற்கள் கொண்டு நாக்கைக் கடித்தல், மிகவும் சூடான பொருளை தற்செயலாகக் படுதல் மற்றும் உங்கள் பற்களின் உராய்வு போன்ற காரணத்தால் ஏற்படுகின்றன.
இது தவிர உணவு ஒவ்வாமை, வைரஸ் தொற்றுகள், கான்கேர் புண்கள், வாய் புண்கள், எரியும் நாக்கு நோய்க்குறி, சிறுநாக்கு தொற்று, நீரிழிவு நோய், இரத்த சோகை மற்றும் வாய் புற்றுநோய் போன்றவை பிற காரணங்கள் ஆகும்.
அதுமட்டுமின்றி அதிகமாக புகைபிடித்தல், வைட்டமின் பி குறைபாடு, அதிக கொழுப்பு உணவுகள் சாப்பிடுவது, சில மருந்துகளின் பக்க விளைவுகள் மற்றும் ரசாயன கலந்த மவுத்வாஷ் பயன்பாடு ஆகியவையும் இந்த பிரச்சனைக்கு காரணமாகலாம்.
இது போன்ற பிரச்சனைகளை இயற்கை தீர்வுகள் மூலமே குறைத்திட முடியும். தற்போது அந்த இயற்கை தீர்வு என்னென்ன என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.
- வாய் கொப்புளம் உள்ளவர்கள், தேங்காய் எண்ணெய் ஊற்றி வாய் கொப்பளிக்கலாம் அல்லது சிறிது பஞ்சில் தேங்காய் எண்ணெய் தொட்டு கொப்புளத்தின் மீது தடவி வரலாம். இரண்டொரு நாட்களிலேயே நல்ல பலன் கிடைக்கும்.
- கிராம்பு எண்ணெயில் சில துளிகளை தண்ணீரில் கலந்து வாயை கழுவவும். இதை ஒரு நாளைக்கு இரண்டு முறை செய்து வரவும்.
- நாக்கில் ஏற்படக்கூடிய கொப்புளங்களை குறைக்க டீ ட்ரீ எண்ணெயை 3-4 சொட்டு தண்ணீரில் கலந்து வாயை கழுவவும். தினமும் இரண்டு முறை இதைச் செய்து வந்தால் ஒரு வாரத்திற்குள் கொப்புளம் மறைந்துவிடும்.
- உப்பு நீரில் வாய் கொப்பளிப்பது, கொப்புளங்களை மட்டுமல்ல, வாய் புண், தொண்டை புண் போன்ற பல பிரச்சனைகளுக்கும் தீர்வாகும். மேலும் உப்பில், சோடியம் மற்றும் குளோரின் உள்ளது. அவை கொப்புளங்களைக் குறைப்பதோடு, அதனால் உண்டாகும் வலியையும் குறைத்திடும்.
- அதற்கு சால்மன், முட்டை, முழு தானியங்கள், ஓட்ஸ், சீஸ் போன்ற வைட்டமின் பி நிறைந்த உணவுகளை அதிகம் உண்ணுங்கள். இதனை சாப்பிட்ட பிறகு கொப்புளங்கள் மறைவதை காணலாம்.




















