நடந்து முடிந்த 2020 பொதுத்தேர்தலில் அமோக வெற்றி பெற்று, அரசாங்கம் அமைக்க போகும் பொதுஜன பெரமுனவிற்கு இந்துமத குரூபீடாதிபதி ஆசி வழங்கியுள்ளார்.
பொதுஜன பெரமுன முன்னணிக்கும் , ஜனாதிபதி கோட்டாபய மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோருக்கு சர்வதேச இந்து மத குருபீடாதிபதி ஸ்ரீ ஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சாரியார் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
மேலும் அவர்,
மக்கள் அதிகப்படியான வாக்குகளால் பொதுஜன பெரமுன முன்னணியை அமோகமாக வெற்றி பெற வைத்துள்ளனர்.
முன்னணியின் தேர்தல் வாக்குறுதிகளில் மக்கள் நம்பிக்கை வைத்து வாக்களித்துள்ளனர்.
மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றும் வகையில் சாதி, மத, இன பேதங்களுக்கு அப்பால், தங்களின் அரசாங்கம் பெருமனதோடு செயற்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.


















