திருமணத்திற்காக பல கனவுகளுடன் வந்த இளைஞர் விமான விபத்தில் இறந்த சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
துபாயில் இருந்து கேரளாவிற்கு வந்த ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் விமானம் நேற்று முன் தினம் விபத்தில் சிக்கியதால், இந்த விபத்து காரணமாக 18 பேர் உயிரிழந்துள்ளனர். 100-க்கும் மேற்பாட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விமானத்தில் விமானி, விமான ஊழியர்கள், பயணிகள் மற்றும் குழந்தைகள் என மொத்தம் 191 பேர் பயணம் செய்துள்ளனர்.
குறித்த விமான விபத்தில், Muhammed Riyas என்ற 24 வயது இளைஞன் உயிரிழந்தார். இவருடன் வந்த சகோதரர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் உயிரிழந்த Muhammed Riyas தன்னுடைய காதலியை இந்த மாதம் திருமணம் செய்ய முடிவு செய்திருந்ததாகவும், ஆனால் விதி அவரை அழைத்துச் சென்றுவிட்டதாக உறவினர் வேதனையுடன் கூறியுள்ளார்.
24 வயதான Muhammed Riyas, கேரளாவின் Cherpulassery-ல் உள்ள ஐடியல் கல்லூரியில் வணிகத்தில் இளங்கலை பட்டம் படித்து கொண்டிருந்த போது, கல்லூரியில் தனது ஜுனியரான ஹன்யா என்ற பெண்ணை காதலித்து வந்ததாக, அவரது மாமா அஷ்ரப் அலி பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார்.
இவர்களின் காதலை ஒரு வருடத்திற்கு முன்னரே ஏற்றுக் கொண்டதால், அப்போதே திருமணத்திற்கு முடிவு செய்யப்பட்டது.
இதனால் Muhammed Riyas விடுமுறையை பொறுத்து முடிவு செய்தோம். அப்போது இருந்தே ரியாஸ் மற்றும் ஹன்யாவின் குடும்பத்தினர் நெருக்கமாக பழக ஆரம்பித்துவிட்டனர்.
அதன் படி, திருமணம் சில மாதங்களுக்கு முன்பு நடக்கவிருந்தது. ஆனால், இந்த கொரோனா தொற்றுநோய்களின் போது பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக அது ஒத்திவைக்கப்பட்டது.
கடந்த மாதம் (ஜூலை) 14-ஆம் திகதி, ரியாஸின் வருகையைப் பொறுத்து இந்த மாதம் திருமணத்தை நடத்த முடிவு செய்தோம். அவர் வீட்டிற்கு வந்தவுடன் தனது தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை முடித்தவுடன் இது நடத்தப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகத்துடன் இந்தியாவுக்கான தனது பயணத்திற்கான விண்ணப்பத்தில் கூட, ரியாஸ், ஒரு வருடத்திற்கு முன்பு திட்டமிடப்பட்டிருந்த திருமணத்திற்கு நான் செல்கிறேன் என்று தான் குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து துபாயில் இருந்த புறப்படும் குறித்த விமானத்தில் ரியாஸ் மற்றும் அங்கு பணி புரியும் அவரது மூத்த சகோதர் ஜாமுதீனும் வந்துள்ளனர்.
ஆனால் விபத்தில் ரியாஷ் உயிரிழந்துவிடவே, நிஜாமுதீன் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
நேற்று, உள்ளூரில் இருக்கும் மசூதியில் ரியாஸிற்கு இறுதிச்சடங்கு நடத்தப்பட்டது. இதில் ரியாஸ் மற்றும் ஹன்யாவின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
இதில் ஹன்யா தான் மிகவும் உடைந்து போய் உள்ளார். அவரை தான் எப்படி ஆறுதல் படுத்த போகிறோம், எங்களுக்கு வார்த்தைகளே இல்லை என்று கூறி முடித்துள்ளார்.