பிரான்ஸ் தலைநகரில் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பாலியன் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரிசின் இரண்டா வட்டாரத்தில் நள்ளிரவு 1 மணிக்கு பொலிசாருக்கு அவசரகால அழைப்பு வந்துள்ளது.
இதையடுத்து, பொலிசார் சம்பவம் நடந்த பகுதியான rue Réaumur வீதிக்கு விரைந்து சென்றுள்ளனர்.
அப்போது அப்பகுதியில் இருந்து சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளைஞன் வேகமாக வெளியேறுவதைக் கண்ட பொலிசார், அவரை பிடித்து சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அப்போது அந்த நபரின் கையில், பெண் ஒருவரின் கைப் பையும், பெண்ணின் பெயரில் வங்கி கடன் அட்டை இருப்பதையும் பொலிசார் கண்டுபிடித்து தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இதையடுத்து பொலிசார் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், அந்த வீதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒன்று திறக்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்தனர்.
அதன் பின் பொலிசார் அங்கு சென்று பார்த்த போது, சுமார் 30 வயது மதிக்கதக்க பெண் நிர்வாண நிலையில் இருந்துள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சந்தேகத்தின் அடிப்படையில் பொலிசார் தடுத்து வைக்கப்பட்டிருந்த 25 வயது மதிக்கத்தக்க அந்த நபரே இவரை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பி ஓட முயற்சித்திருப்பது தெரியவந்தது.
இந்த சம்பவம் எப்படி நடந்தது என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை, முழு விசாரணைக்கு பின்னரே இந்த சம்பவத்தின் முழு பின்னணி தெரியவரும். இருப்பினும் பெண்கள் நள்ளிரவு நேரத்தில் மிகவும் கவனமுடன் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதற்கு இது ஒரு உதாரணம்