ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச19ம் திருத்தச் சட்டம் அகற்றப்படுவதனை விரும்பவில்லை என்று முன்னாள் அமைச்சரும் ஜனாதிபதியின் சகோததரருமான பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளதாக சிங்கள இணைய தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
19ம் திருத்தச் சட்டம் ரத்து செய்யப்பட்டால் ஜனாதிபதியின் பதவிக் காலம் ஆறு ஆண்டுகள் ஆகும் எனவும் இதனால் இவ்வாறு 19ம் திருத்தச் சட்டம் ரத்து செய்யப்படுவதனை ஜனாதிபதி விரும்பவில்லை.
மக்கள் ஐந்து ஆண்டுகளுக்கு ஆணை வழங்கியுள்ள நிலையில் அதனை நீடித்துக் கொள்ள ஜனாதிபதி விரும்பவில்லை.
18ம் திருத்தச் சட்டத்தில் ஜனாதிபதியின் பதவிக் காலம் தொடர்பில் காணப்படும் சில விடயங்களில் பலருக்கு உடன்பாடில்லை.
தற்போதைய அரசியல் அமைப்பில் சிறு சிறு திருத்தங்களைச் செய்வதனை விடவும், முழுமையாக அரசியல் அமைப்பில் மாற்றங்களைச் செய்வதே சாலச் சிறந்ததாகும்.
புதிய அரசியல் அமைப்பு ஒன்றை அவசர அவசரமாக நிறைவேற்றிக் கொள்ள முடியாது. எனவே அதற்கு நீண்ட கால அவகாசம் தேவைப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.