இரண்டு, மூன்று பேர்களுடன் குளிரூட்டப்பட்ட அறைகளில் இருந்துகொண்டு நாட்டு மக்கள் தொடர்பில் தீர்மானங்களை எடுக்கும் கட்சியல்ல என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளர்களுடன் நேற்று பிற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இதனைக் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் எந்தவொரு தீர்மானமும் கலந்துரையாடல்கள் மூலம் அனைவரும் இணைந்து மேற்கொள்ளும் வழிமுறையே பின்பற்றும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன், தமது கட்சியில் இனம், மதம் உள்ளிட்ட வேறுபாடுகளுக்கு இடமில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும், மாகாண சபை தேர்தலுக்கு வெற்றிகரமாக முகங்கொடுக்க தற்போதிலிருந்து தயாராகி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.