ஸ்ரீலங்கா பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை அலரிமாளிகையில் இன்று ஆரம்பித்துள்ளார்.
நிறைவடைந்த பொதுத்தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்ட மஹிந்த ராஜபக்ஷ, 5 இலட்சத்து 27 ஆயிரத்து 364 விருப்பு வாக்குகளை பெற்றிருந்தார்.
அந்த வகையில், இலங்கை வரலாற்றில் வேட்பாளர் ஒருவர் பெற்றுக்கொண்ட அதிக விருப்பு வாக்குகளாக இது பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதனடிப்படையில் நாட்டின் 14ஆவது பிரதமராக இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பிரதமராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
களனி ரஜமஹா விகாரையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் சர்வதேச நாடுகளின் ராஜதந்திரிகள் மற்றும் ஏனைய முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.