கம்பஹா – தொம்பே பகுதியில் இடம்பெற்ற விபத்தில் தாய் மற்றும் மகள் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸார் வெளியிட்டுள்ள தகவல்களின்படி,
மோட்டார் சைக்கிள் மீது கார் ஒன்று மோதியதில் இந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது.
விபத்தில் , மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த தாய் மற்றும் மகள் படுகாயமடைந்த நிலையில் தொம்பே வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளனர்.
இச்சம்பவத்தில் 42 வயதுடைய தாய் மற்றும் 19 வயதும் மகளுமே உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தொம்பே பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.