மகிந்த ராஜபக்ஷ நான்காவது முறையாக நாட்டின் பிரதமராக இன்று (11) கடமைகளை ஏற்றுக்கொண்டார்.
இன்று காலை அலரி மாளிகையில் பிரதமர் கடமைகளை ஏற்றுக்கொண்டார்.
2020 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றதன் பின்னர், இலங்கை பிரதமராக ராஜபக்ஷ ஞாயிற்றுக்கிழமை களனி ரஜ மகா விகாரையில் நான்காவது முறையாக பதவியேற்றார்.
நடந்து முடிந்த பொதுத்தேர்தலில், மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான இலங்கை பொதுஜன பெரமுன 145 நாடாளுமன்ற இடங்களை பெற்று அமோக வெற்றியீட்டியது.
பிரதமர் ராஜபக்ஷ குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்டு 527,364 விருப்பு வாக்குகளைப் பெற்றார். பொதுத் தேர்தலில் வேட்பாளர் பெற்ற அதிகமான விருப்ப வாக்குகள் இதுவாகும்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ 1970 ல் முதல் முறையாக நாடாளுமன்றத்தில் நுழைந்தார். ஆனால் 1977 தேர்தலில் தனது இடத்தை இழந்தார்.
1989 பொதுத் தேர்தலில் வென்ற பின்னர் மீண்டும் நாடாளுமன்றத்தில் நுழைந்தார். 2005 வரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.
இந்த காலப்பகுதியில் தொழிலாளர் மற்றும் மீன்வளத்துறை உட்பட பல அமைச்சுக்களை வகித்தார். 2001 நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் அவர் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டார்.
2004 இல் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணிகளின் வெற்றியைத் தொடர்ந்து, மஹிந்த ராஜபக்ஷ முதன்முறையாக இலங்கையின் பிரதமராக நியமிக்கப்பட்டார்.
அவர் 2005 ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்று நாட்டின் ஐந்தாவது நிறைவேற்றுத் ஜனாதிபதியான்.
2010 தேர்தலில் அவர் மீண்டும் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2015 ஜனாதிபதித் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டு, குருநாகல் மாவட்டத்தில் இருந்து போட்டியிட்டு ஓகஸ்ட் 2015 இல் மீண்டும் நாடாளுமன்றத்தில் நுழைந்தார்.
மகிந்த ராஜபக்ஷவும் நாட்டின் பிரதமராக 2018 ஒக்டோபர் 26 மற்றும் 2019 நவம்பர் 21 ஆம் திகதிகளில் பதவியேற்றார்.