ஐ.தே.கவிற்கு புதிய தலைமை தேவை என்பதை க்ட்சியின் தலைவர் ரனில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார் என்று, ஐ.தே.க வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கட்சி தலைவர்களுக்குமிடையில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலில் இதை ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
புதிய தலைவர் குறித்து, கட்சியின் குழுக்களுடன் விவாதிக்கப்பட்டு அடுத்த கட்சி செயற்குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
கட்சி முழுவதுமாக மறுசீரமைக்கப்பட வேண்டும் என்றும் அதை வெற்றிப் பாதையில் கொண்டு வர ஒரு அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.