தலைமன்னார் பொலிஸ்பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் காலாவதியான விசாவுடன் சட்ட விரோதமாக தங்கியிருந்த ரஸ்யா நாட்டு பிஜை ஒருவர் கைது செய்யப்பட்டு தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளார்.
தலைமன்னார் கடற்படையினரால் குறித்த நபர் கைது செய்யப்பட்டு தலைமன்னார் பொலிஸாரிடம் நேற்று திங்கட்கிழமை கையளிக்கப்பட்டார்.
தலைமன்னார் பொலிஸார் விசாரணைகளின் பின்னர் நேற்று திங்கட்கிழமை மாலை மன்னார் பதில் நீதிவான் இ.கயஸ் பெல்டானோ முன்னிலையில் குறித்த ரஷ்ய பிரஜையை ஆஜர்படுத்தினர்.
குறித்த நபர் சார்பாக சட்டத்தரணி டிணேஸன் முன்னிலையாகி இருந்தார்.
விசாரணைகளை மேற்கொண்ட பதில் நீதவான் குறித்த நபரை விளக்கமறியலில் வைக்க உத்த ரவிட்டார்.
மேலும் குறித்த ரஸ்ய பிரஜைக்கு “கொரோனா” தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பெயரில் குறித்த நபர் தலைமன்னார் பொலிஸாரின் பாதுகாப்பில் தனிமைபடுத்தி வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த நபருக்கான சீ.பி.ஆர் பரிசோதனை அறிக்கை கிடைக்க பெற்ற பின்னர் மேலதிகார நடவடிக்கை மேற்கொள்ளப்பவுள்ளமை குறிப்பிடத்தக்கது