கடலில் சிக்கித் தத்தளித்துக் கொண்டிருந்த தனது மகனையும் அவனது நண்பனையும் காப்பாற்றுவதற்காக கடலில் குதித்த ஒரு பெண், மகன் கண் முன்னாலேயே பரிதாபமாக உயிரிழந்த சோகம் பிரித்தனியாவில் நடந்தேறியது.
நேற்று முன்தினம் மாலை 5.30 மணியளவில் நார்போல்க் கடற்கரையில் Danni (30) என்ற பெண், தனது மகன் மற்றும் அவனது நண்பனுடன் கடற்கரைக்கு சென்றுள்ளார்.
அப்போது, கடலில் விளையாடிக்கொண்டிருந்த Danniயின் மகனும் நண்பனும் தண்ணீரில்சிக்கித் தடுமாறுவதைக் கவனித்துள்ளார் அவர்.
உடனே, முன் பின் யோசிக்காமல் பிள்ளைகளைக் காப்பாற்றுவதற்காக கடலில் குதித்துவிட்டாராம் Danni.
உடனே அருகிலிருந்த சிலரும் கடலுக்குள் குதித்திருக்கிறார்கள். அவர்களில் இருவர், சிறுவர்கள் இருவரையும் மீட்டுவிட்டாலும், Danniயை அவர்களால்காப்பாற்ற முடியவில்லை.
அதற்குள் விரைந்து வந்த முதலுதவிக்குழுவினர் Danniயை கரைக்கு இழுத்துவந்து முதலுதவி சிகிச்சைகள் மேற்கொண்ட நிலையிலும், அவரைக் காப்பாற்ற முடியாமல் போயிருக்கிறது.
நடந்ததைக் கண்ணால் பார்த்துக்கொண்டிருந்த ஒருவர், அந்த பெண்ணின் மகன் பதற்றத்துடன் என்ன நடக்கிறது என்று புரியாமலே தாய்க்கு முதலுதவி சிகிச்சை செய்யப்படுவதைப் பார்த்துக்கொண்டிருப்பதை கவனிப்பதற்கே கஷ்டமாக இருந்தது என்கிறார்.