தேசிய புள்ளிவிவரங்களுக்கான அலுவலகம் (ஓஎன்எஸ்) புதிதாக வெளியிட்டுள்ள தரவுகளின்படி, பிரித்தானியாவில் கொரோனா ஊரடங்கு தொடக்கத்திலிருந்து 730,000 பேர் வேலை இழந்துள்ளனர் என்பதை காட்டுகிறது.
மார்ச் மற்றும் ஜூலை மாதங்களுக்கு இடையில் பிரித்தானியாவில் ஊதியம் பெறும் தொழிலாளர்களின் எண்ணிக்கை 730,000 குறைந்துள்ளது, கடந்த மாதம் மட்டும் 81,000 பேர் வேலை இழந்துள்ளனர்.
இதில் பெரும்பாலானோர் கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக வேலை இழந்ததாக தேசிய புள்ளிவிவரங்களுக்கான அலுவலகம் (ஓஎன்எஸ்) தெரிவித்துள்ளது.
ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் வேலையின்மை 220,000 அதிகரித்துள்ளது, இது 2009 முதல் பிரித்தானியா வேலைவாய்ப்பில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய காலாண்டு வீழ்ச்சியாகும்.
துரதிர்ஷ்டவசமாக இந்த நோய் சுகாதார நெருக்கடியை மட்டுமல்ல, பொருளாதார நெருக்கடியை எற்படுத்தும் என்பது நாம் அறிந்ததே, அதில் ஒரு பகுதி தான் இது என ஜூனயர் சுகாதார அமைச்சர் எட்வர்ட் ஆர்கர் கூறினார்.