உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன் ஆஜராகுமாறு முன்னாள் பிரதமர் ரனில் விக்ரமசிங்க, முன்னாள் அமைச்சர் சாகல ரத்நாயக்க மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ரனில் விக்கிரமசிங்க, முன்னாள் அமைச்சர் சாகல ரத்நாயக்க ஆகியோர் 21 ஆம் திகதியும், ருவன் விஜேவர்தன 18 ஆம் திகதியும் ஆணைக்குழு முன் ஆஜராக அழைக்கப்பட்டுள்ளனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சமயத்தில் ரணில் விக்கிரமசிங்க பிரதமராகவும், சாகல ரத்நாயக்க காவல்துறைக்கு பொறுப்பான சட்டம் ஒழுங்கு அமைச்சராகவும், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக ருவான் விஜேவர்தனையும் பணியாற்றினர்.


















