ஐக்கிய தேசியக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கட்சியின் மூத்த உறுப்பினர்களுக்கும் இடையில் நேற்று சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது
இந்த சந்திப்பின்போது கட்சிக்கு புதிய தலைவர் ஒருவர் தேவை என்று கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தநிலையில் கட்சிக்கான புதிய தலைவரை தெரிவு செய்யும் கலந்துரையாடலுக்காக மத்திய செயற்குழுவை கூட்டுமாறு ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன் கட்சியை முழுமையாக மீளமைக்கும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று விக்ரமசிங்க இதன்போது கேட்டுள்ளார்




















