இலங்கையின் புதிய விளையாட்டு அமைச்சராக இலங்கை பொதுஜன பெரமுன (எஸ்.எல்.பி.பி) கட்சியின் ஹாம்பாந்தோட்டை மாவட்ட எம்.பி. நாமல் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.
2010ல் நாடாளுமன்றத்திற்குள் காலடி வைத்த நாமலுக்கு அமைச்சரவை பதவி வழங்கப்படுவது இதுவே முதல் முறை.
விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சராக நாமல் ராஜபக்ஷ இன்று ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ முன் பதவியேற்றார்.
இதன் மூலம் இலங்கையின் 18வது விளையாட்டு அமைச்சராக ஆனார் நாமல், அதுமட்டுமின்றி 34 வயதான நாமல் இலங்கையின் இளம் விளையாட்டு அமைச்சரும் ஆவார்.
செயின்ட் தாமஸ் கல்லூரியில் பயின்ற நாமல் ராஜபக்ஷ, இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் ரக்பி போட்டியில் சிறந்து விளங்கினார் மற்றும் ரக்பி அணி தலைவராகவும் செயல்பட்டுளார்.
இளைஞர் ம/ விளையாட்டுத்துறை அமைச்சரவை அந்தஸ்து உள்ள அமைச்சராக நியமிக்கப்பட்டதில் நான் பெருமையடைகிறேன். என் மீது கொண்டுள்ள நம்பிக்கைக்கு, ஜனாதிபதி @GotabayaR ம/ பிரதமர் @PresRajapaksa ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பதுடன், எனது நாட்டுக்கு என்னால் முடிந்த சேவை செய்ய எதிர்பார்க்கிறேன். https://t.co/2ETT6M8e5H
— Namal Rajapaksa (@RajapaksaNamal) August 12, 2020