‘வடக்கிலும், கிழக்கிலும் உள்ள வாக்காளர்களை வலுப்படுத்துவதில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இனிமேல் அதிக அக்கறை காட்டத் தீர்மானித்துள்ளது.
நடந்து முடிந்த தேர்தலில் யாழ்ப்பாணத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுள்ளதையடுத்தே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர கூறினார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர ஊடகம் ஒன்றுக்கு இதை தெரிவித்துள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
இம்முறை தேர்தலில் 14 சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் பாராளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளனர். நாட்டைக் கட்டியெழுப்பும் திட்டத்தை இனி நாம் நடைமுறைப்படுத்த வேண்டும்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி யாழ்ப்பாணம், நுவரெலியா, களுத்துறை என்ற மூன்று மாவட்டங்களிலும் தனித்துப் போட்டியிட்டு பல வருடங்களுக்குப் பின்னர் யாழ். தேர்தல் மாவட்டத்தில் அமோகமான வெற்றியைப் பெற்றுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தொடர்பாக யாழ்ப்பாணம் மக்கள் நம்பிக்கை வைத்துள்ளதையே இது காட்டுகிறது.
எனவே எதிர்காலத்தில் நாம் வடக்கிலும், கிழக்கிலும் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களுடனான பிணைப்பினை வலுப்படுத்திக் கொள்வதற்கு எதிர்பார்த்திருக்கிறோம் என்றார் தயாசிறி ஜயசேகர கூறுகிறார்