முல்லைத்தீவு – கேப்பாபுலவு தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டவர்களில் மூன்று கர்ப்பிணி பெண்கள் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
கேப்பாபுலவு விமானப்படைத்தள தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலைத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளிநாட்டில் இருந்து வந்த 256 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.
ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் என டுபாயில் இருந்து வருகை தந்த 256 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தார்கள்.
இவர்களில் மூன்று கர்ப்பிணி பெண்கள் மகப்பேற்று காலம் நெருங்கிய காரணத்தினால் யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள்.