பிரேசில் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கோழி இறைச்சியில் கொரோனா தொற்று இருப்பதாக சீனா அறிவித்துள்ளது.
இந்நிலையில், ஷென்ஷென் நகர மக்கள், இறக்குமதி செய்த பதப்படுத்தப்பட்ட உணவுகளை வாங்கும்போது எச்சரிக்கையுடன் இருக்குமாறு உள்ளூர் அரசு நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சீனாவில் உள்ள உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதி பகுதியில் கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டது. கொரோானா தொற்றினால் உலகம் முழுவதும் சுமார் ஏழரை லட்சம் மக்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையிலேயே, பிரேசில் நாட்டில் இருந்து இறக்குமதி செய்த கோழி இறைச்சியில் கொரோனா தொற்று இருப்பதாக சீனா அறிவித்துள்ளது.
சீனாவில் ஷென்ஷென் நகரில், பிரேசில் நாட்டில் இருந்து இறக்குமதி செய்த கோழி இறைச்சியின் மேற்பரப்பில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரியை பரிசோதித்து பார்த்ததில், அதில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஷென்ஷென் நகர மக்கள், இறக்குமதி செய்த பதப்படுத்தப்பட்ட உணவுகளை வாங்கும்போது எச்சரிக்கையுடன் இருக்குமாறு உள்ளூர் அரசு நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுபற்றி அரசு தரப்பில் கூறுகையில், “இறக்குமதி செய்த பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் நீர்வாழ் பொருட்களை வாங்கும்போது நுகர்வோர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.