செஞ்சோலை படுகொலை நினைவநாள் இன்றாகும். 54 மாணவிகள் உள்ளிட்ட 61 பேர் கொடூரமாக கொல்லப்பட்ட தாக்குதலின் 14ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்றாகும். எனினும், நினைவேந்தல் நிகழ்விற்கு புதுக்குடியிருப்பு பொலிசார் தடைவிதித்துள்ளனர்.
தடை அதை உடை என்பதையே வாழ்க்கையாக கொண்ட எம்.கே.சிவாஜிலிங்கம் அஞ்சலி நிகழ்வை நடத்த திட்டமிட்டுள்ளார். இதற்காக யாழிலிருந்து அஞ்சலிக்கு தேவையான பொருட்களுடன் புறப்பட்டுள்ளார்.
குறிப்பாக அஞ்சலி நிகழ்வுகளிற்கு வீட்டிலிருந்தே வாழைக்குற்றியுடன் புறப்பட்டு செல்லும் சிவாஜிலிங்கம், இன்றும் வாழைக்குற்றி சகிதம் புறப்பட்டுள்ளார்.