முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மகாவலி மற்றும் கமத்தொழில் அமைச்சுக்களை எதிர்பார்த்ததாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல்வாதி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இன்று வெளியான சிங்கள பத்திரிகை ஒன்றிடம் அந்த அரசியல்வாதி இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட உடன்படிக்கைக்கு அமைய மைத்திரிபால சிறிசேனவுக்கு அமைச்சு பதவி ஒன்று கோரப்பட்டிருந்தது.
எனினும் அமைச்சு பதவிகளை பகிரும் போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு சிறிய அகப்பையில் பரிமாறப்பட்டது. கட்சியின் தலைவருக்கு அமைச்சர் இல்லை, இதனால், கட்சியின் ஏனைய உறுப்பினர்களுக்கு மகிழ்ச்சியடைய முடியாது.
இது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு காட்டப்பட்ட பாராபட்சம் எனவும் அந்த கட்சியின் அந்த அரசியல்வாதி மேலும் தெரிவித்துள்ளார்.