உயர்அழுத்த மற்றும்தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக வடக்கின் பர பகுதிகளில் மின்சாரம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி நாளை (15) சனிக்கிழமை காலை 8 மணியிலிருந்து மாலை 5 மணிவரை ,
யாழ் மாவட்டத்தில்- சுன்னாகம் மின்நிலைய பிரதேசம், உரும்பிராய் பிரதேசம், அண்ணா பண்ணை, விளாத்தியடி, அங்கிலிப்பாய், அன்னக்கை, குமரகோட்டம், கோண்டாவில் இ.போ.ச பிரதேசம், தம்பாலை, இடைக்காடு, வளலாய், கதிரிப்பாய், சேந்தாங்குளம், இளவாலை, மெய்கண்டான் பாடசாலை, கொழும்புத்துறை வீதி, ஏவி வீதி, துண்டி, நெடுங்குளம், மணியந்தோட்டம், கெலன் தோட்டம், உதயபுரம், பாசையூர், புங்கன்குளம் சந்தி ஆகிய இடங்களிலும்
வவுனியா மாவட்டத்தில்- மகாகச்சக்கொடி கிராமம், ஆண்டியப்புளியங்குளம், வாரிக்குட்டியூர் 4ஆம் வட்டாரம் ஆகிய இடங்களலும்
மன்னார் மாவட்டத்தில்-எழுத்தூரிலிருந்து தலைமன்னார் வரை, தலைமன்னார் கடற்படை முகாம், இளையோர் பயிற்சி நிலையம், தலைமன்னார் பல்மைரா ஹவுஸ், கூல்மென் ஐஸ் தொழிற்சாலை, அந்தோனிப்பிள்ளை ஐஸ் தொழிற்சாலை, பேசாலை ஐஸ் தொழிற்சாலை, வங்காலைப்பாடு ஐஸ் தொழிற்சாலை, கரைசல் பல்மைரா ஹவுஸ், ரிமெஸ் ஆடைத்தொழிற்சாலை, தலைமன்னார் வைத்தியசாலை ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் தடைப்படும்.