புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் கைதான மகாலிங்கம் சசிகுமார் (சுவிஸ்குமார்) பொலிஸ் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டது தொடர்பில் புதிய தகவல் வெளியாகியுள்ளது.
ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தின் சிறப்பு புலனாய்வு ஆய்வாளரான ஸ்ரீதரன் என்பவராலே, சுவிஸ் குமார் விடுவிக்கப்பட்டதாக உதவி பொலிஸ் அத்தியட்சகர் சிசிர திசேரா இன்று (14) அரசியல் பழிவாங்கல் குறித்து விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் தெரிவித்தார்.
சுவிஸ்குமார் விடுவிக்கப்பட்ட விவகாரத்தில் டி.ஐ.ஜி லலித் ஜெயசிங்க மீது குற்றம்சாட்டப்பட்டு அவர் கைதாகியிருந்த நிலையில், இன்று இந்த தகவல் வெளியாகியுள்ளது.
சுவிஸ் குமாரை தடுத்து வைத்து மருத்துவமனையில் சேர்க்குமாறு முன்னாள் டி.ஐ.ஜி லலித் ஜெயசிங்க பிறப்பித்த உத்தரவை மீறி அவர் அவ்வாறு செய்ததாக ஏஎஸ்பி சிசிர திசெரா தெரிவித்தார்.
டி.ஐ.ஜி லால் குமார கமகே பிறப்பித்த உத்தரவையடுத்தே, சந்தேக நபர் விடுவிக்கப்பட்டதாக ஏ.எஸ்.பி சிசிரா திசெரா தெரிவித்தார்.
ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர், ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி உபாலி அபேரத்னயின் குறுக்கு விசாரணை செய்தபோது, டிஐஜி லால் குமாரா கமகே பிறப்பித்த உத்தரவே, லலித் ஜெயசிங்க பிறப்பித்த உத்தரவு மீறப்படுவதற்காக காரணமாக அமைந்ததாக சிசிரா திசெர கூறினார்.


















