கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பெரும் களேபர நிலைமையையடுத்து இலங்கை தமிழ் அரசு கட்சியின் அரசியல்குழு கூட்டம் இன்று (15) திருகோணமலையிலுள்ள இரா.சம்பந்தனின் இல்லத்தில் கூடுகிறது.
தேசியப்பட்டியல் விவகாரத்தில் நடந்த சதி, கட்சி தலைமையை மாற்ற முனைந்தமை போன்ற சம்பவங்களின் பின்னர் தமிழ் அரசு கட்சியின் அரசியல் செயற்குழு இன்று கூடுகிறது.
அரசியல் செயற்குழுவில்- இரா.சம்பந்தன், மாவை சேனாதிராசா, சீ.வீ.கே.சிவஞானம், கி.துரைராசசிங்கம், எக்ஸ்.குலநாயகம், எம்.ஏ.சுமந்திரன் மற்றும் கிளிநொச்சி சார்பில் சி.சிறிதரன், வவனியா சார்பில் எஸ்.சத்தியலிங்கம், மற்றும் செ.செல்வராசா, த.கலையசரன் ஆகியோர் அரசியல் செயற்குழுவில் அங்கம் வகிக்கிறார்கள்.
இதுவரை கொழும்பு கிளை சார்பில் யாரும் கலந்துகொள்ளாத நிலையில், இம்முறை கொழும்பு கிளை சார்பில் கே.வி.தவராசாவை கலந்து கொள்ளுமாறு, தலைவர் மாவை சேனாதிராசா அழைப்பு விடுத்துள்ளார்.
அரசியல் செயற்குழுவில் எம்.ஏ.சுமந்திரன் அணியின் கையே மேலோங்கியுள்ளது. அந்த அணியின்- இரா.சம்பந்தன் (அவர் கூட்டமைப்பின் தலைவரென்ற போதும், சுமந்திரன் அணி சார்ந்தவராகவே செயற்பட்டு வருகிறார்), எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன், கி.துரைராசசிங்கம், த.கலையரசன், ப.சத்தியலிங்கம் ஆகியோர் ஒரு அணியாக செயற்படுவார்கள்.
மாவை தரப்பில்- மாவை, சீ.வீ.கே.சிவஞானம், எக்ஸ்.குலநாயகம், பொன்.செல்வராசா, கே.வி.தவராசா ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
காலை 11 மணிக்கு கூட்டம் இடம்பெறும்.


















