இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சேதன் செளகான் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.
72 வயது வயதான இவர் கடந்த மாதம் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான நிலையில் லக்னெளவில் உள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
ஏற்கனவே சிறுநீரகம் செயலிழந்ததால் செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று உயிரிழந்துள்ளார்.
இவர் உத்தரப் பிரதேச மாநில அமைச்சராக பதவி வகித்ததுடன் இந்திய அணிக்காக 40 டெஸ்ட், 7 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



















