மட்டக்களப்பு – காத்தான்குடிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்முனை பிரதான வீதியின் கிராங்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் காயமடைந்துள்ளனர். குறித்த விபத்து இன்று இடம்பெற்றுள்ளது.
புணாணையிலிருந்து கோவில்போரதீவு நோக்கிச் சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டி வேகக் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மின்கம்பத்தில் மோதியுள்ளது.
இந்நிலையில் முச்சக்கரவண்டியில் பயணம் செய்த 3 பெண்களுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதோடு, அதில் ஒருவர் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளார்.


















