நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் தோல்வியடைந்த அரசியல்வாதிகள் பலர் பதவி கோரி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மக்களுக்கு சேவை செய்வதற்கு பதவி இல்லாமல் மேற்கொள்வது சிரமம் என அவர்கள் பிரதமரை சந்தித்து தங்கள் வருத்தத்தை வெளியிட்டுள்ளனர்.
எனினும் பதவிகள் அவசியம் என்றால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து பெற்றுக் கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
எப்படியிருப்பினும் பிரதமரை சந்தித்து பதவி கோரிய ஒருவரும் ஜனாதிபதி சந்தித்து இதுவரையிலும் பதவி கேட்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.


















