இளவாலையில் உள்ள பாடசாலை ஒன்றில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் மீது இனம்தெரியாத கும்பல் ஒன்றினால் தாக்கப்பட்டுள்ளார்.
நேற்றுக்காலை 7.30 மணியளவில் பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த போது இளவாலையில் வைத்து ஆசிரியர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அரியாலைக்கு சேர்ந்த ஆசிரியர் ஒருவரே தாக்குதலுக்குள்ளாகியுள்ளார்.
2 மோட்டார் சைக்கிள்களில் வந்த நால்வர் ஆசிரியரை வீதியில் வழிமறித்து தாக்குதல் மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
தாக்குதலுக்குள்ளான ஆசிரியர் பாடசாலை அதிபர் ஊடாக இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளார்.



















