வீதியில் செல்லும் பொதுமக்களை விரட்டி விரட்டி தாக்கும் பருந்து பற்றிய செய்திகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பொலன்னறுவ மாவட்டம் பராக்கிரம சமுத்திர பகுதி அணைக்கட்டை அண்டிய பகுதிகளில் இந்த சம்பவம் நடப்பதாப பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்த புகைப்படங்களும் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
பராக்கிரம சமுத்தி கரையோர உயர்ந்த மரங்களில்வாழும் இந்த பருந்து, அந்த வீதியால் செல்லும் பொதுமக்களை விரட்டி விரட்டி தாக்குவதாக சொல்கிறார்கள். இதனால் சிறியவர்களை அந்த வீதியில் தனியே செல்ல பெற்றோர் அனுமதிப்பதில்லை.
எனினும், பொலன்னறுவை வனவிலங்கு அதிகாரிகள் தமக்கு அப்படியான முறைப்பாட வரவில்லையென மறுத்துள்ளனர்.



















